Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

டிசம்பர் 02, 2023 11:55

நாமக்கல்: சேலம் மாவட்டம் சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் அங்ஙகமான விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன், மைக்ரோபயாலஜி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் சார்பாக உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தின விழா நடைபெற்றது.

எய்ட்ஸ் விழிப்புணர்வு தின விழாவிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனகைளின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார்.

நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், வைஸ்சேர்மன் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, தலைமை செயல் அதிகாரிகள் பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் வரதராஜீ, டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். 

காலையில் கல்லூரி வகுப்புகள் துவங்கியதும் முதல் 3 மணி நேரத்திற்கு முதுகலை டெக்ஸ்டைல் ஃபேஷன் டிசைனிங் மாணவிகள் தங்கள் ஜீனியர் மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு கல்வியை கரும்பலகையில் எய்ட்ஸ் பரவும் வழிவகைகளையும் அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு குறிப்புகளுடன் பாடம் நடத்தினர்.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் எய்ட்ஸ் நோயாளிகள் பற்றி புள்ளி விவரங்களுடன் மாணவிகள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். 

மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்கள் காரணமாக தமிழகத்தில் எய்ட்ஸ் குறைந்து வருவது பற்றிய சான்றுகளை சமர்ப்பித்தனர்.

சுய ஒழுக்கம், இந்திய பாரம்பரிய நடைமுறை, மேலைநாட்டு கலாச்சாரச் சீரழிவு தவிர்த்தல் ஆகியவை எய்ட்ஸ் நோயை ஒழிக்கும் என்று மாணவிகள் வகுப்புகளில் பாடம் நடத்தினர்.

சிறந்த முறையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பாடம் நடத்திய முதுகலை ஃபேஷன் மாணவிகளுக்கு இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், டீன் சி.கே இரவிசங்கர் ஆகியோர் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர்.  

மாலையில் மிகப்பிரமாண்டமான எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பினை மைக்ரோபயாலஜி மற்றும் நாட்டுநலப்பணித் திட்ட மாணவிகள் நடத்தினர்.

‘எய்ட்ஸை ஒழிப்போம்; தகாத உறவுகளைத் தவிர்ப்போம்” என்று கோஷத்துடன் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவிகள் எய்ட்ஸ் ஒழிப்பு பற்றிய அடையாளச்சின்ன மனிதச் சங்கிலியை உருவாக்கி எய்ட்ஸ் ஓழிப்பு உறுதிமொழி ஏற்று பேரணியைத் துவக்கினர்.

விழிப்புணர்வு பேரணியில் சங்ககிரி வளாகத் தலைமைச் செயல் அதிகாரி பேராசிரியர் வரதராஜீ, டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், மைக்ரோபயாலஜி துறைத்தலைவர்கள் டாக்டர் மைதிலி, நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி லோகநாதன், பேராசிரியர்கள் ஜோதி, தினேஷ்குமார் மற்றும் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

எய்ட்ஸ் விழிப்புணர்வு கல்வி போதித்தல் மற்றும் பேரணிக்கான ஏற்பாடுகளை டெக்ஸ்டைல் ஃபேஷன் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன், மைக்ரோபயாலஜி, நாட்டு நலப்பதித் திடட மாணவிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்