Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு “நூலகச் செம்மல் விருது”

நவம்பர் 30, 2023 04:56

நாமக்கல்: சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் ஒரு அங்ஙகமான விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில்  தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது.

டிஜிட்டல் வசதியுடன் 12 துறைகளைச் சார்ந்த 25,000க்கும் மேற்பட்ட கலை, அறிவியல், தொழில்நுட்பம், தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வணிகம், ஃபேஷன் டிசைனிங், டெக்ஸ்டைல் தொழில் நுட்பம் சம்மந்தப்பட்ட அறிவுசார் புத்தகங்கள் நிறைந்த விவேகானந்தா டிஜிட்டல் நூலகத்தில் நடைபெற்றது.

துவக்க விழாவிற்கு  விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றம் மருத்துவமனைகளின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார்.

நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், வைஸ் சேர்மன் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, தலைமை செயல் அதிகாரிகள் பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் வரதராஜீ, திறன் மேம்பாட்டுத்துறை இயக்குநர் டாக்டர் குமரவேல், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே. இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், நூலக அதிகாரி டாக்டர் குணசிங், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேசிய நூலக வார விழாவில் மாணவிகளுக்கு வாசிக்கும் பழக்கத்தின் முக்கியத்துவம் விளக்கப்பட்டது. “ஒவ்வொரு மாணவியும் தினமும் ஒரு மணி நேரம் நூலகத்தில் புத்தகங்களை வாசிக்க வேண்டும். 

புத்தகத்தில் வாசித்த முக்கியமான கருத்துக்களை மனதில் பதிய வைத்து குறிப்பெடுத்து வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். 

இக்கட்டான காலகட்டங்களில் புத்தகங்களில் படித்த ஒவ்வொரு கருத்தும் வாழ்க்கையில் கலங்கரை விளக்கு போல் வழிகாட்டும்” என்று துவக்க விழாவில் சிறப்புரையாற்றிய இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார் மற்றும் டீன் டாக்டர் சி.கே.இரவிசங்கர் ஆகியோர் குறிப்பிட்டனர்.

ஒரு வார காலம் நடைபெற உள்ள தேசிய நூலக விழாவின் துவக்க விழாவில் விவோகனந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியைச் சார்ந்த 1,700 மாணவிகள் மற்றும் துறைத் தலைவர்கள் டாக்டர் மு.மெய்வேல், டாக்டர் பிரபாகரன், டாக்டர் கலைவாணி, டாக்டர் லோகநாயகி, டாக்டர் மைதிலி,  டாக்டர் அபிதா, பேராசிரியர் சண்முகப்பிரியா, பேராசிரியர் சுகுணா ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை விவேகானந்தா மாணவியர் அமைப்பினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்