Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு ஊக்கத் தொகையுடன் ஒரு மாத தொழிற்பயிற்சி

நவம்பர் 30, 2023 04:40

நாமக்கல்: சேலம் மாவட்டம், சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் அங்ஙகமான விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் இறுதியாண்டு இளங்கலை மாணவிகளுக்கு அவிநாசியில் உள்ள எஸ்.பி அப்பேரல் ஏற்றுமதி ஆலையில்;  ஊக்கத்தொகையுடன் கூடிய ஒரு மாத கால நேரடி தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. 

பல்கலைக்கழக வழிகாட்டுதலின் அடிப்படையில் மற்றும் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் பயிலும் அனைத்துத் துறை மாணவிகளுக்கும் ஏற்றுமதி ஆலைகளில் நேரடி தொழிற்பயிற்சி பெறுவதை மாணவிகள் விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு தங்கள் பருவத் தேர்வின் முடிவில் பல்கலைக்கழக விடுமுறை நாளில் விரும்பி மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த அடிப்படையில் நவம்பர் 28 ஆம் நாள் இறுதியாண்டு இளங்கலை டெக்ஸ்டைல் ஃபேஷன் டிசைனிங் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன்  மாணவிகளுக்கு அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் நிறைவடைந்த நிலையில் அவர்கள் சமர்ப்பித்த இண்டர்ன்ஷிப் புராஜெக்ட் ஆய்வறிக்கையின் அடிப்படையில் பிரபல ஏற்றுமதி நிறுவனமான  அவிநாசி எஸ்.பி அப்பேரல் எக்ஸ்போர்ட் நிறுவனம் மாதாந்திர ஊக்கத் தொகையுடன் ஒரு மாத கால நேரடி தொழிற்பயிற்சிக்கு இறுதியாண்டு மாணவிகள் அனைவரையும் தேர்ந்தெடுத்துள்ளது. 

டிசம்பர் 1 முதல் 31 ஆம் நாள் வரை ஒவ்வொரு மாணவிக்கும் உணவு மற்றம் தங்கும் இடம் இலவச வசதியுடன் ரூ. 2,500 ஊக்கத்தொகை வழங்கி நேரடி தொழிற் பயிற்சியை அவிநாசியில் அமைந்து எக்ஸ்போர்ட் தலைமையகத்தில் அமைந்துள்ள அதிநவீன தொழிற்சாலையில் நேரடி தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. 

எஸ்.பி.அப்ரேலஸ் எக்ஸ்போர்ட்ஸ் ஏ.ஜி.எம் நாகராஜ் வழிகாட்டுதலின் அடிப்படையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு விவேகானந்தா மாணவிகளுக்கு ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கிறது. 

இதில் சிறந்த முறையில் தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு மிக அதிக ஊதியத்துடன் வேலைவாய்ப்பு அளிக்கவும், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இண்டர்ன்ஷிப் புராஜெக்ட் ஆய்வறிக்கை மூலம் நேரடி தொழிற் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நைஸி, நித்யா, இந்துஜா, கீர்த்தனா, பத்மப்ரியா ஆகியோர் தலைமையிலான இறுதியாண்டு இளங்கலை டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் மாணவிகள் குழுவினரை விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனகைளின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி நிர்வாக இயக்குனர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்த நாரீஸ்வரன், வைஸ்சேர்மன் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, தலைமை செயல் அதிகாரிகள் பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் வரதராஜீ, டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர்  சி.கே.இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பாராட்டி பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர்.

தலைப்புச்செய்திகள்