Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதன்சந்தை மாட்டு சந்தையில் ரூ.1.30 கோடிக்கு வர்த்தகம்

நவம்பர் 30, 2023 04:33

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் அதிகாலை 5 மணிக்கு மாட்டு சந்தை கூடிவது வழக்கம்.

நேற்று அதிகாலையில் துவங்கிய புதன்சந்தை மாட்டு சந்தைக்கு 800க்கும் மேற்பட்ட பசு, எருமை, கறவை மாடுகள், இறைச்சி மாடுகள், கன்று குட்டிகள் விற்பனைக்கு வந்திருந்தன.

மாடுகளை வாங்கவும், விற்கவும் புதன்சந்தை மாட்டு சந்தைக்கு கேரளா, கர்நாடகா மாநிலங்கள், கோயம்புத்துார், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் வந்திருந்தனர். 

கடந்த வாரம், 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற இறைச்சி மாடு, நேற்று விலை குறைந்து, நேற்று விலை குறைந்து 19 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைஆ னது. 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற கன்று குட்டிகள், நேற்று 5 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது. 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற பசு மாடு நேற்று 32 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற எருமை மாடு 28 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

சபரிமலை சீசன் துவங்கியதால், இறைச்சி மாடுகளை வாங்க கேரளா, கர்நாடாக, ஒரிசா மாநிலத்தின் வியாபாரிகள் வருகை குறைந்து காணப்பட்டது.

இந்த வாரம் புதன்சந்தை மாட்டுசந்தையில் வர்த்தகம் பாதிப்படைந்து ரூ.1.30 கோடிக்கு நடைபெற்றது.

தலைப்புச்செய்திகள்