Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 13.75 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்

நவம்பர் 30, 2023 04:27

நாமக்கல்: நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில், ரூ.13.75 லட்சம் மதிப்புள்ள பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் (என்சிஎம்எஸ்) உள்ளது.

இந்த சங்கத்தில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு நாமக்கல், மோகனூர், சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, சிங்களாந்தபுரம், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், புதுச்சத்திரம், வேலகவுண்டம்பட்டி, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

நாமக்கல், திருச்செங்கோடு, கொங்கணாபுரம், ஈரோடு, அவிநாசி, கோவை, திண்டுக்கல், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். ஏலத்தில் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ரூ. 6,290 முதல், ரூ. 7,419 வரை விலை போனது.

மட்ட ரக பருத்தி ரூ. 4,219 முதல், ரூ. 5,609 வரை விலை போனது. ஏலத்தில் மொத்தம் 665 மூட்டை பருத்தி ரூ. 13.75 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டது.

தலைப்புச்செய்திகள்