Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமீரகப் பிரிவின் சார்பில் அமீரக தேசிய தின விழா கொண்டாட்டம்

நவம்பர் 28, 2023 12:23

அஜ்மான்: அஜ்மானில் உள்ள ஹீலியோ பூங்காவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் சார்பில் 52 வது அமீரக தேசிய தின விழா கொண்டாட்டம் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி கடந்த 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்புடன் நடந்தது.

இந்த விழாவில் இந்திய யூனியன்  முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் கே. நவாஸ் கனி எம்.பி. சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார். 

தொடக்கமாக நாகூர் அமீர் அலி இறைவசனங்களை ஓதினார். கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் மற்றும் தமிழ்த்துறை தலைவர் கம்பம் பீ.மு.மன்சூர் தலைமை தாங்கி, பேசினார்.

அப்போது, சமூகத்தின் மேம்பாட்டுக்கால அல்லும், பகலும் அயராது உழைத்து வரும் கே. நவாஸ் கனி எம்.பி. இந்த விழாவில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் நவாஸ் கனி எம்.பி.யின் வருகை எங்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கி உயர்கல்விக்கு உதவி வரும் அவரது பணிகள் சிறப்புக்குரியது.

குறிப்பாக இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்ட நாளில் நடைபெறும் இந்த விழாவில்  நவாஸ் கனி எம்.பி. பங்கேற்றிருப்பது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த சங்க தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் ஜியாவுதீன் வழிகாட்டுதலுடன் இந்நிகழ்ச்சி நடக்கிறது என்றார். 

இந்திய யூனியன்  முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் கே. நவாஸ் கனி எம்.பி பேசும் போது, அமீரகத்தின் 52 வது தேசிய தின கொண்டாட்டத்தை உற்சாகமாக கொண்டாடி வரும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினருக்கு எனது வாழ்த்துக்கள்.

மேலும் கல்லூரியின் நிறுவனர்கள் ஜமால் முஹம்மது ராவுத்தர், காஜாமியான் ராவுத்தர் உள்ளிட்டோர் சமுதாயக் கல்விக்காக ஏற்படுத்திய திட்டத்தால் பலர் பயனடைந்து வருகின்றனர். இத்தகையதொரு நிகழ்ச்சியில் பங்கேற்பது பெருமையளிக்கிறது.

முன்னாள் மாணவர் சங்கத்தின் கல்விப் பணிகள், கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை தங்கு தடையின்றி தொடர எனது ஒத்துழைப்பு இருக்கும் என்றார்.

இந்நிகழ்வில் ஈரோடு எம்.கே.ஜமால் முஹம்மது எழுதிய திப்புசுல்தான் குறித்த கையேட்டை நவாஸ் கனி எம்.பி. வெளியிட்டார். 

விழாவில் தொழிலதிபர் அய்யம்பேட்டை வாலன் ஜெய்லான், சமூக ஆர்வலர் பைசுர் ரஹ்மான், டாக்டர் கியாசுதீன், மௌலவி சுலைமான் மஹ்ளரி ஆலிம், எஸ்.டி. கூரியர் பொது மேலாளர் சிராஜுதீன், திருச்சி ஜாஹிர் ஹுசைன், அமீரக காயிதேமில்லத் பேரவையின் துணை பொதுச் செயலாளர் பரக்கத் அலி,  காயிதேமில்லத் பேரவை துபை அமைப்பாளர் காமில், இளையான்குடி அபுதாகிர், தேவிபட்டினம் ஆசிக், அல் மஜ்ரா நிறுவனத்தின் ஜாஹிர், வாலன் அசார் உள்ளிட்டோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.  
மேலும் அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

சிறப்பு விருந்தினர்களுக்கு பூங்கொத்து வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் விளையாட்டு பணிகளை சிறப்புடன் நடத்திய கட்டுமாவடி பைசல் ரஹ்மான், பேரளம் நவாசுதீன், மதுரை அப்துல் கனி, ஜகபர் சாதிக், நவுசாத், அம்ஜத் கான் உள்ளிட்ட குழுவினருக்கும், பெண்கள் பிரிவில் விளையாட்டு போட்டிகளை சிறப்புடன் நடத்திய ஜாஸ்மின் அபுபக்கர், தக்சின் உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

மன்னர் மன்னர் நன்றியுறை நிகழ்த்தினார்.  சங்க துணைத் தலைவர் முதுவை ஹிதாயத் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். விழாவில் 200 க்கும் அதிகமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.

இந்த விழா சிறப்புடன் நடைபெற சூப்பர் சோனிக் நிறுவனம், பீயெஸ்ஸெம் ஹெச்.கே. ஹோல்டிங், திருச்சி கோல்ட், அல் மஜாரா கெமிக்கல்ஸ், அல் வஹா குழுமம், அனடோலியா நிறுவனம், மொலினா டிரேடிங், சிங்கப்பூர் சில்க் ஹவுஸ், எஸ்.ஆர்.எம். கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், ரஹ்மத் பார்டர் புரோட்டா கடை, ரொமனா வாட்டர், அஜ்மான் தஞ்சை உணவகம், கல்ப் கட்ஸ், பிளேவரி, ஃபார்ம் பாஸ்கெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஆதரவு அளித்தன.

தலைப்புச்செய்திகள்