Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு

நவம்பர் 28, 2023 12:18

மல்லசமுத்திரம்: காளிப்பட்டி கந்தசாமி கோவலில் திருக்கார்த்திகை மற்றும் கிருத்திகை வழிபாடு நடந்தது.

சேலம் – நாமக்கல் மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரம் மற்றும் திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு, காலை 6 மணிமுதல் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கோவில் உட்பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வாணையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சேலம், கரூர், ஈரேடு என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

தலைப்புச்செய்திகள்