Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராசிபுரம் நகர திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

நவம்பர் 28, 2023 11:42

ராசிபுரம்: தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரம் நகர திமுக சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் கழகக் கொடி ஏற்றி நகராட்சி தொடக்கப் பள்ளியில், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா பென்சில் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

நகர செயலாளர் என்.ஆர்.சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் முனைவர் ஆர்.கவிதா சங்கர், நகர மன்ற உறுப்பினர்கள் விநாயகமூர்த்தி, செல்வம், பிரபு, சண்முகம், வார்டு செயலாளர்கள் அமிர்தலிங்கம், சக்திவேல், ஆனந்த், அரசு வழக்கறிஞர் சரவணன், மாநில மருத்துவர் அணி செயலாளர் ராஜேஷ்பாபு மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்