Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாட்டுக்காக பதக்கம் வெல்ல நூறு சதவீதம் களத்தில் முயற்சியை கொடுப்பேன்: நீரஜ் சோப்ரா

நவம்பர் 27, 2023 12:52

பானிபத்அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் வெளிநாட்டுக்குச் சென்று பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ‘ஒலிம்பிக் - 2024’ தொடர் நடைபெற உள்ளது.

இதில் உலக நாடுகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று விளையாட உள்ளனர்.

இந்த சூழலில் ஈட்டி எறிதலில் உலக சாம்பியானகவும், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கமும் வென்ற நீரஜ் சோப்ரா, பாரிஸ் ஒலிம்பிக் குறித்து பேசியுள்ளார்.

“பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான எனது பயிற்சியை தொடங்க உள்ளேன். அதற்காக நான் வெளிநாடு செல்கிறேன். நாட்டுக்காக பதக்கம் வெல்ல நூறு சதவீதம் களத்தில் எனது முயற்சியை கொடுப்பேன்” என நீரஜ் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் முந்தைய ஒலிம்பிக் தொடரை காட்டிலும் கூடுதலாக பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு தேவைப்படும் முறையான பயிற்சியை வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அரசு தரப்பிலும் அதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தலைப்புச்செய்திகள்