Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீனாவின் லியாங்-வாங் ஜோடி சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது

நவம்பர் 27, 2023 12:39

ஷென்ஸென்: சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - ஷிராக் ஷெட்டி ஜோடி தோல்வி கண்டது.

சீனாவின் ஷென்ஸென் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு இறுதி சுற்று ஆட்டம் நடைபெற்றது.

இதில் சீனாவின் லியாங் வே கெங்- வாங் சாங் ஜோடி 21-19, 18-21, 21-19 என்ற புள்ளிகள் கணக்கில் உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாய்ராஜ் ராங்கிரெட்டி - ஷிராக் ஷெட்டி ஜோடியை வீழ்த்தியது.

ஒரு மணி நேரம் 11 நிமிடத்தில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் செட்டை இழந்த இந்திய ஜோடி, 2-வது செட்டில் போராடி வெற்றி பெற்றது.

ஆனால் 3-வது செட்டில் சீனாவின் லியாங்-வாங் ஜோடி சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தலைப்புச்செய்திகள்