Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோகனூர் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி கோரிக்கை 

நவம்பர் 25, 2023 11:33

நாமக்கல்: தேசிய நெடுஞ்சாலைத் துறை சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி,  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தலைமையில், மோகனூர் அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் பி.எஸ்.நடராஜன், துணைத் தலைவர் கே.சோமசுந்தரம், செயலாளர் எம்.அறிவானந்தம் பொருளாளர் சாரங்கபாணி உள்ளிட்ட நிர்வாகிகள் நாமக்கல் நெடுஞ்சாலைத் துறை இளநிலை பொறியாளரிடம் வழங்கினர்.

அம்மனுவில்,  நாமக்கல் நெடுஞ்சாலை மற்றும் கட்டுமான துறை சார்பாக மோகனூர் - நாமக்கல் சாலை மற்றும் மோகனூர் -  வேலூர் சாலை ரயில்வே மேம்பாலம் வரை உள்ள நெடுஞ்சாலை எல்லைப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள விளம்பர பதாகைகள், போர்டுகள், தள்ளுவண்டி, சிற்றுண்டி கடைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த எந்த ஆட்சேபனை இல்லை.

ஆனால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவித்துள்ள கடிதத்தின் மூலம் இரும்பு தட்டிகள் வைத்துள்ள பகுதிக்குள் மேற்கூரை அகற்ற சொல்லுவது வணிகம் செய்யும் 100 சதவீத வணிகர்களுக்கு அனைத்து தொழிலும் பாதிக்கப்படும். 

மேலும் இரும்பு கேட்டிற்கு உட்புறம் மேற்கூறையினால் எவ்வித போக்கு வரத்து பாதிப்பு ஏற்படாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏனெனில் மழை, காற்று, மாசுபடுதல் போன்ற இயற்கை சீற்றத்தால் அனைத்து வணிக நிறுவனங்களும் மிகவும் பாதிக்கப்படுவோம்.

வணிகர்கள் வணிகம் செய்ய எந்த பாதிப்பும் இல்லாமல் இடைஞ்சல் இல்லாமலும் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். 

மேலும் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை தங்களுடன் சேர்ந்து வணிகர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

மேலும் ஆக்கிரமிப்பு தொடர்பான ஆலோசனைகளை வணிகர்களை நேரில் அழைத்து தங்களது மேலான கருத்துக்களை தருமாறு கேட்டுக்  கொள்கிறோம்.

மேலும் இரும்பு கேட்டிற்கு வெளியே உள்ள இடங்களில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால் காவல் துறையிடம் புகார் அளித்து வாகனங்களை பறிமுதல் செய்ய ஆலோசனை கூறுங்கள்.

வணிகர்கள் கடைக்கு முன்புறம் இரும்பு தட்டிக்கு உட்புறம் உள்ள கூரையினால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்