Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மருத்துவ முகாம்: ஆட்சியர் தொடக்கி வைத்தார்

நவம்பர் 25, 2023 11:23

நாமக்கல்: அனைத்து தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டு உடல் பரிசோதனைகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர்        ச. உமா அறிவுறுத்தினார்.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாமக்கல் நராட்சி திருமண மண்டபத்தில், நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் உமா, மருத்துவ முகாமை துவக்கி வைத்துப் பேசியதாவது:தமிழ்நாடு முதல்வர் உத்தரவின் பேரில், மறைந்த முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்முறையாக நாமக்கல் நகராட்சியில் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.

நாமக்கல் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியாளர்களில் ஆண்கள் 49 மற்றும் பெண்கள் 49 ஆக மொத்தம் 98 பணியாளர்களும் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களில் ஆண்கள் 121 மற்றும் பெண்கள் 182 ஆக மொத்தம் 303 பணியாளர்களும் சேர்த்து மொத்தம் 401 தூய்மை பணியாளர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பன்னோக்கு உயர்தர மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இருதய மருத்துவம், நுரையீரல், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ பிரிவுகளும், ஹூமோகிளோபின், இரத்த வகை கண்டறிதல், சர்க்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவு, இ.சி.ஜி. ஸ்கேன், கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் தூய்மை பணியாளர்களுக்கு மேற்கொள்ளப் பட்டு மருத்துவ குழுவினரால் ஆசோசனைகள் வழங்கப்பட்டது.

இதேபோன்று கொமாரபாளையம் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியாளர்களில் ஆண்கள் 53 மற்றும் பெண்கள் 46 ஆக மொத்தம் 99 பணியாளர்களும் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர் களில் ஆண்கள் 80 மற்றும் பெண்கள் 28 ஆக மொத்தம் 109 பணியாளர் களும் குடிநீர் பிரிவு பணியாளர்கள் 25 அலுவலர்கள் மற்றும் பணியாளர்  55 மொத்தம் 288 பணியாளர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

மேலும், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஆகிய நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ சிகிச்சை முகாம் இன்று 25 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

எனவே, இந்த மருத்துவ முகாமில் அனைத்து தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டு உடல் பரிசோதனைகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் கூறினார்.

தொடர்ந்து, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவை தொடங்கப்பட்டதை தொடர்ந்து, நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்