Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எலச்சிபாளையத்தில் மோட்டார் தொழில்களை பாதுகாக்க ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

நவம்பர் 25, 2023 11:10

எலச்சிபாளையம்: அநியாய சாலை வரி உயர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒருபகுதியாக எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நாமக்கல் மாவட்ட மோட்டார் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் அதை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது.

மோட்டார் தொழிலை பாதுகாக்க வேண்டும்.தமிழக போக்குவரத்து துறை சாலை வரி உயர்த்தி ஓட்டுநர்களை வஞ்சிக்கின்ற சாலை வரி உயர்வினை ரத்து செய் வேண்டும்.

போக்குவரத்து துறையே  ஆன்லைன் அபராதம் முறையை கைவிட வேண்டும். எப்சி.இன்சூரன்ஸ் கட்டணங்கள் உயர்த்தியதை வாபஸ் பெற வேண்டும். 

காவல்துறையின் கெடுபிடிகளை கைவிட வேண்டும். இணையவழி ஆப் சேவையை உடனடியாக துவங்க வேண்டும்.

அக்ரிகேட்டர் விதிகளை உடனடியாக வகுத்திட வேண்டும். என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் முனியப்பன் தலைமை வகித்தார்.

சங்க மாவட்ட செயலாளர் சு.சுரேஷ், மாவட்ட உதவி செயலாளர் ஆனந்தன், சிஐடியு தலைவர் கே.எஸ். வெங்கடாசலம், எலச்சிபாளையம் கிளை தலைவர் சேகர், ரமேஷ், மாபாஷா உட்பட பலா் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

தலைப்புச்செய்திகள்