Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம்

நவம்பர் 25, 2023 11:02

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குடும்ப நலத்துறை மூலம் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் உள்ள தகுதிவாய்ந்த தாய்மார்களுக்கு நவீன லேப்ராஸ்கோப் சிகிச்சை முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதில் 9 தாய்மார்களுக்கு லேப்ராஸ்கோப், 2 தாய்மார்களுக்கு கருகலைப்புடன் கூடிய லேப்ராஸ்கோப், 1 தாய்மாருக்கு பிரசவத்திற்கு பின்னும் என மொத்தம் 12 பெண்களுக்கு இந்த முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மருத்துவர்கள் ஜெயந்தி, செல்வாம்பிகை, மயக்கவியல் நிபுணர் செந்தில்ராஜா, செவிலியர்கள், உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

 அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு ஊக்கத்தொகையான ரூ.600 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

மேலும் ஊக்கப்பரிசாக புடவை வழங்கப்பட்டது.

முகாமில் துணை இயக்குனர்கள் பூங்கொடி (சுகாதாரப்பணிகள்) , வளர்மதி (குடும்ப நலம்), வட்டார மருத்துவ அலுவலர் கா.செல்வி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் சார்லஸ் ராஜன், வட்டார சுகாதார புள்ளியியலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பார்வையிட்டனர்.

தலைப்புச்செய்திகள்