Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மல்லசமுத்திரத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

நவம்பர் 21, 2023 12:18

மல்லசமுத்திரம்: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு கைத்தறி துறை நடத்தும் இலவச சிறப்பு மருத்துவ முகாம், மல்லசமுத்திரம் சந்தைப்பாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் காலை காலை 9 மணிக்கு பேரூராட்சி தலைவர் திருமலை குத்துவிளக்கு ஏற்றி முகாமைத்துவம் தொடங்கி வைத்தார்.

மல்ல சமுத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் ஜெகதீஷ் தலைமை தாங்கினார்.

பேரூராட்சி துணைத் தலைவர் மனோரஞ்சிதம், திருச்செங்கோடு சரக கைத்தறி உதவி இயக்குனர் பழனிகுமார், கைத்தறி துணி நூல்கட்டுப்பாட்டு அலுவலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் நுரையீரல் சம்பந்தமான பரிசோதனைகள், கண் பரிசோதனை, எலும்பு மற்றும் மூட்டு வலி பரிசோதனை, பொது மருத்துவ பரிசோதனை மற்றும் உடல் பருமன் பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறிதல், ரத்த அழுத்தம் கண்டறிதல், இசிஜி பரி சோதனை, சிறுநீர் பரிசோதனை, பொது சுகாதாரம், மகளிர் சுகாதாரம், இதர மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக பரிசோதிக்கப்பட்டது. அனைவருக்கும் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

அரவிந்த் மருத்துவமனை கண் மருத்துவர் கேசவ் தலைமையில் 217-நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யபட்டு104 - பேருக்கு இலவசமாக கண் கண்ணாடி உடனடியாக வழங்கினார்.

கண்புரை அறுவை சிகிச்சைக்கு 42 பேர் பரிந்துரைக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

முன்னதாக நுழைவு வாயிலில் டெங்கு ஒழிப்பு கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு பார்வையாளருக்கு எவ்வாறு பாதிப்பு வருகிறது.

என வட்டார சுகாதார ஆய்வாளர் பாலு விழிப்புணர்வு ஏற்படுத்திஅறிவுரை வழங்கினார்.

 இதில் மல்ல சமுத்திரம் சரகத்தில் உள்ள 10 சங்கங்களில் இருந்து நெசவாளர்கள் ஆண்கள், பெண்கள் என உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இதில் வார்டு கவுன்சிலர் லட்சுமி ரவி, வழக்கறிஞர் ஆனந்த், ஆனந்தராஜ்,
கைத்தறி அலுவலர்கள் அருண், ஆய்வாளர் கண்ணன் மற்றும் மேலாளர்கள், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த மருத்துவர்கள் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்