Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாற்றுத்திறனாளி குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் உரிமைத்தொகை வழங்க ஆர்ப்பாட்டம்

நவம்பர் 21, 2023 12:12

நாமக்கல்: மாற்றுத்திறனாளி குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பில் நாமக்கல், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, அனைத்து மாற்றுத் திறனாளி குடும்பத் தலைவிகளுக்கும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறிப்பாக அனைத்து மாற்றுத்திறனாளி குடும்ப தலைவிகளுக்கும் கலைஞர் உரிமைத் தொகை வழங்க வேண்டும்.

அதிக அளவில் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு இலவசமாக வழங்கிய பெட்ரோல் ஸ்கூட்டரை காரணம் காட்டி, கலைஞர் மகளிர் உதவித்தொகை மறுப்பதை கைவிட வேண்டும்.

மாற்று திறனாளிகள் குடும்பத்திற்கு உடனடியாக உரிமைத் தொகை வழங்க வேண்டும். தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த வாக்குறுதிப்படி மாற்றுத்திறனாளி குடும்ப தலைவிகளுக்கு, கலைஞர் உரிமைத் தொகை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மோகனூர் தாலுக்கா தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். 

ஆர்ப்பாட்டத்தில் மோகனூர் தாலுகா செயலாளர் பெருமாள், சேந்தமங்கலம் தாலுகா பொறுப்பாளர் சேனாதிபதி, கொல்லிமலை தாலுகா அமைப்பாளர் சந்திரசேகரன், ராசிபுரம் தாலுகா பொறுப்பாளர் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் முருகேசன், நாமக்கல் நகர அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரங்கசாமி, இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் கண்ணன் ஆகியோர் பேசினர். திரளான மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்