Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் இந்திய மகளிர் சட்டம் குறித்த கருத்தரங்கம்

நவம்பர் 21, 2023 12:08

நாமக்கல்: நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டிரினிடி
மகளிர் மன்றத்தின் சார்பில் “இந்தியாவில் மகளிர்க்கான் சட்டம் குறித்த ஒரு கண்ணோட்டம்” என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களான நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின்
செயலர் மற்றும் சார்பு நீதிபதி சி.விஜயகார்த்திக், தலைமை சட்ட பாதுகாப்பு ஆலோசகர்
வீ. ராமச்செழியன் மற்றும் உதவி சட்டப் பாதுகாப்பு ஆலோசகர் ஜே. பூம்பொழில்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

சட்டம் என்பது தாயின் கருவறை முதல் புதைக்கும் கல்லறை வரை உள்ளது. கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என கண்டறிவது கூட சட்ட மீறல் தான். நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு கணவன் இறந்த பின் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது.

மேலும் 18 வயது ஆகும் முன்பே திருமணம்,  பலதார மணம், கட்டாய வரதட்சணை என்று மகளிருக்கு எதிராகவே இந்த சமுதாயம் இருந்துள்ளது.

ஆனால், மகளிர்க்கு ஆதரவாக பல சட்டம் இயற்றியபின் தான் மகளிர் பலர் இன்று
முன்னேற்றம் கண்டுள்ளனர். மகிளா நீதிமன்றம் என்பது மகளிர்க்காகவே உருவாக்கப்பட்டது.

போக்சோ சட்டமும் மகளிர்க்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. மத்தியரூபவ் மாநில அரசுகளும் மகளிர்க்கு பல திட்டங்கள் மூலம் பல உதவிகள் செய்து வருகின்றன. எந்த விதமான பிரச்சனைகளையும் சட்டத்தின் மூலம் தீர்வு காண முடியும் என அவர்கள் இந்நிகழ்வில் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் எம். ஆர்.லட்சுமிநாராயணன், இயக்குநர் - உயர்கல்வி - அரசுபரமேசுவரன் ஆகியோர் பேசினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை டிரினிடி மகளிர் மன்ற பொறுப்பாளர்கள் என்.சாந்தி, என்.தங்கமணி ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தலைப்புச்செய்திகள்