Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்செங்கோட்டில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள்

நவம்பர் 21, 2023 11:31

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் தமிழ்நாடு மாணவர் ஆராய்ச்சி அமைப்பு (TSRO) மற்றும் கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி (தன்னாட்சி)ஆகியவை இணைந்து நடத்தும் சாலையோர குழந்தைகள் மற்றும் திருநங்கைகளுக்கான ஒரு ரூபாய் கல்வி திட்டம் குறித்த 3ம் ஆண்டு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் 2.5, 5, 10 கிமீ தூரம் நடந்த ஓட்டங்களை திருச்செங்கோடு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் இமயவரம்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

உலகம் முழுவதும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இல்லாத சுமார் 12 கோடி மாணவ மாணவிகள் இருப்பதாக ஐநா புள்ளிவிபரம் கூறும் நிலையில் அதனை மாற்றும் வகையில்தங்களால் இயன்ற அளவில் தமிழ்நாடு மாணவர் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ஒரு ரூபாய் கல்வித் திட்டம் என்ற திட்டத்தை துவக்கி அதன் மூலம் சாலையோர மாணவ மாணவிகளை தத்தெடுத்து கல்வியளிக்கும் செயலைச் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கடந்த மூன்று ஆண்டுகளாக மாரத்தான் போட்டி நடத்தி வருகின்றனர். மூன்றாவது ஆண்டாக நிதி திரட்டும் வகையில்மரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

நாலு முதல் ஆறு வயது குழந்தைகளுக்கு இரண்டு புள்ளி ஐந்து கிலோமீட்டர் ஏழு வயது முதல் 14 வயது உள்ள குழந்தைகளுக்கு ஐந்து கிலோமீட்டர் 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பத்து கிலோமீட்டர் என மாரத்தான் ஓட்டம் நடந்தது.

திருச்செங்கோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய போட்டிகளை திருச்செங்கோடு போலீஸ் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இந்த போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பெரியவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 10 கிலோமீட்டர் போட்டியில் முதல் 6 இடங்களை பிடித்தவர்களுக்கும், இதே போல் ஐந்து கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டியிலும் , 2.5 கிமீ தூரப் போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்பட்டது பரிசளிப்பு விழாவுக்கு வந்தவர்களை டி.எஸ்.ஆர்.ஓ நிறுவனர் மற்றும் தலைவர் ரவிக்குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கே.எஸ். ஆர் கல்வி நிறுவனங்களின் முதன்மைநிர்வாகி அகிலா முத்துராமலிங்கம், கல்லூரி முதல்வர் செந்தில்குமார், V.S.B.வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

இந்த மராத்தான் நிகழ்ச்சியில் சேலத்தை சேர்ந்த நாகினி என்ற திருநங்கையும், 438வது முறையாக மராத்தான் போட்டியில் கலந்து கொள்ளும் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வீரர் பெரம்பலூரைச் சேர்ந்த கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களை உதவி காவல் கண்காணிப்பாளர் இமயவரம்பன் பாராட்டினார்.

தலைப்புச்செய்திகள்