Tuesday, 14th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் 

நவம்பர் 17, 2023 10:43

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதிவாரம்  புதன்கிழமை  தோறும் மருத்துவக் குழுவினரால் மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மையை  கண்டறிந்து புதியதாக மாற்றுதிறனாளிகள் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக  மேற்படி முகாமுடன் சேர்த்து இனி கூடுதலாக  ஒவ்வொரு மாதமும்  2-வது  செவ்வாய் கிழமையில் இராசிபுரம்  அரசு மருத்துவமனையிலும் மற்றும் 4-வது செவ்வாய் கிழமையில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையிலும் மாற்றுத் திறனாளிகள் ஊனத்தின் தன்மையை  கண்டறிந்து உடனடியாக புதியதாக மாற்றுதிறனாளிகள் அடையாள அட்டை  வழங்குவதற்கான  மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.  

மேலும் மேற்படி  முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை  (UDID) பெறுவதற்கு மாற்றுத் திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை நகல் (முழுவதுமாக), தொலைபேசி எண், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தினை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

மேற்படி அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் மருத்துவ முகாமில் மாற்றுத் திறனாளிகளின் ஊனத்தின் தன்மை குறித்து பரிசோதனை செய்வதற்கு கீழ்காணும் மருத்துவக்  குழுவினர் கலந்து கொள்வர்.

மேலும் குழந்தைகள் நல  மருத்துவர், காது, மூக்கு தொண்டை நிபுணர், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், மனநல சிகிச்சை மருத்துவர், கண் சிகிச்சை மருத்துவர், செவித்திறன் பரிசோதகர் பங்கேற்றகவுள்ளனர்.

 நவம்பர் மாதம் 4-வது செவ்வாய்கிழமை 28.11.2023–ந் தேதி அன்று  திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில்  நாமக்கல் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள்  அனைவரும் கலந்து  கொண்டு  பயன்பெறுமாறு  நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் 
ச.உமா தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்