Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மல்லசமுத்திரத்தில் ரூ.1.50லட்சத்திற்கு பருத்தி ஏலம்

நவம்பர் 17, 2023 10:31

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் மொத்தம் ரூ.1.50லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் மொத்தம் 75மூட்டைகள் வரத்து வந்தது.

இதில், சுரபி ரகம் குவிண்டாலுக்கு ரூ.6310 முதல் ரூ.7305வரையிலும், பி.டி.,ரகம் ரூ.6370 முதல் ரூ.7050வரையிலும், கொட்டு பருத்தி ரூ.3109 முதல் ரூ.4510வரையிலும் என மொத்தம் ரூ.1.50லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வருகிற 22ல் நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்