Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராசிபுரம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் ஆட்சியர் ச.உமா ஆய்வு

நவம்பர் 17, 2023 10:28

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், அரியாகவுண்டம்பட்டி ஊராட்சி மற்றும் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், ஓ.செளதாபுரம் ஊராட்சி, இராசாபாளையம் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா ஆய்வு மேற்கொண்டார். 

இராசிபுரம் வட்டம், அரியகவுண்டம்பட்டி பகுதியில் இ – பட்டா வழங்குவதற்காக வரன்முறைபடுத்தும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா பார்வையிட்டு, 
இ – பட்டா வழங்குவதற்கு வரன்முறைபடுத்தப்பட்ட விபரங்களை விரிவாக கேட்டறிந்தார்.

மேலும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினார். 

தொடர்ந்து, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், ஓ.செளதாபுரம் ஊராட்சிக்குட்பட்ட இராசாபாளையம் கிராமத்தில் டெங்கு தடுப்பு பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டு, நேற்று முதல் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள 175 வீடுகளிலும் 1 மருத்துவர், 1 செவிலியர், 1 ஆய்வக நுட்புனர் மற்றும் 1 உதவியாளர் மூலம் காய்ச்சல், சளி உள்ளவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் குறித்து நடமாடும் மருத்துவமனை மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பொதுமக்கள் தங்களது வீடுகளில் மழைநீர் தேங்கி இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

காய்ச்சல், சளி, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவ முகாமிற்கு சென்று மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என அறிவுறுத்தனார். 

அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் அனைத்து பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் ஏற்படமால் இருக்க கொசு ஒழிப்பு புகை அடிக்கவும், தூய்மை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா  அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்