Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோட்டார் வாகனங்களுக்கான வரி செலுத்த 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

நவம்பர் 15, 2023 11:18

நாமக்கல்: லாரி மற்றும் மோட்டார் வாகனங்களுக்கான வரி செலுத்த 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து தமிழக அரசின் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழக போக்குவரத்து துறையால், கடந்த 7ம் தேதி, வெளியிட்ட உத்தரவின் படி, போக்குவரத்து அல்லாத மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கான திருத்தப்பட்ட வரி விகிதங்கள், நவ.9 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

லாரி உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களுக்கு, அபராதம் இல்லாமல் நடப்பு காலாண்டு (31.12.2023 முடிய) வரியை செலுத்துவதற்கான கடைசி தேதி 14.11.2023 ஆகும். பல வாகன உரிமையாளர்கள் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், நடப்பு காலாண்டு வரியை, அபராதம் இல்லாமல் வரி செலுத்துவதற்கான கடைசி தேதியை 14.11.2023 முதல் 30.11.2023 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 2023 மற்றும் டிசம்பர் 2023 மாதத்திற்கான வரி வித்தியாசத்தையும் அபராதமின்றி வருகிற 30 ஆம் தேதி வரை செலுத்தலாம்.

இதற்காக ஆன்லைன் மூலம் தேவையான மாற்றங்கள் தேசிய தகவல் மையம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் 30 க்குப் பிறகு, வழக்கமான அபராதம் வசூலிக்கப்படும்.

இது ஒரு இடைக்கால ஏற்பாடு மட்டுமே. இது தமிழகத்தில் பதிவு செய்ப்பட்டுள்ள, ஆம்னி பஸ்கள் தவிர அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்