Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இயக்குனர் அவதாரம் எடுக்கும் சமூக சேவகர்

நவம்பர் 14, 2023 12:19

ராசிபுரம் :சினிமாவில் இயக்குனராக களம் காணும் சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர் கோபி காந்தி உலகப் புகழ் பெற்ற தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் "எம்.ஜி.ஆர்-ன் ரசிகன்" கதாபாத்திரத்தை முதல் முறையாக இயக்கி, நடிக்க உள்ளார்.

சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக சேவை மைய நிறுவனர், தலைவர் கோபி காந்தி 1."சமூக உணர்வுகள்"-(ரத்ததானம்), 2."கண்ணீர் அஞ்சலி"-(மது பாதிப்பு), 3."பசுமை"-(மரக்கன்றுகள் பயன்), 4."முயற்சி"-(எடிசன் வாழ்கை), 5."அகதி"- (மாற்று திறனாளிகளின் நம்பிக்கை) 6."டுடே டெக்ஸ்டைல்"-(தொழிலை புதுமைப்படுத்துதல்) ஆகிய ஆறு "விழிப்புணர்வு குறும்படங்கள்" மற்றும் 1."முதல் மாணவன்"-(மாணவர்கள் சமுதாய விழிப்புணர்வு), 2."வைரமகன்"-(தாய்ப்பாசம்), 3."வீரக்கலை"-(இளைஞைர்கள் தன்னம்பிக்கை) ஆகிய மூன்று "கருத்து" திரைப்படங்களையும் மொத்தம் "ஒன்பது விழிப்புணர்வு படங்களை" கதை எழுதி, தயாரித்து, நடித்து, வெளியீடு செய்துள்ளார்.

தொடர்ந்து நான்காவது திரைப்படமாக "உச்சம் தொடு" என சர்வதேச "விளையாட்டு வீரரின் வாழ்வியலில்" கோபி காந்தி தயாரித்து, நடித்து வருகிறார்.

தொடர்ந்து உலக புகழ் பெற்ற தலைவர், தமிழக முன்னாள் முதலமைச்சர் "எம்.ஜி.ஆர்-ன் ரசிகன்" கதாபாத்திரத்தில் கோபி காந்தி முதல் முறையாக இயக்கி, நடிக்க உள்ளார். இது குறித்து ராசிபுரம் செய்தியாளர்களிடம் கோபி காந்தி கூறியதாவது.

தனக்கு சினிமா ஆசை வருவதற்கு காரணம் எம்.ஜி.ஆர் எனவும், எம்.ஜி.ஆர் சிறு வயதில் நாடக நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, சினிமாவில் நுழைந்து மக்களை நல்ல பாதைக்கு அழைத்து சென்று மிகப் பெரிய உயரத்தை அடைந்தார்.

படத்தின் பாடல்களில் ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்றும், கதையில் சமூகத்திற்கு நாம் எவ்வாறு பயன்பட வேண்டும் என்பதையும் திரைப்படத்தில் கருத்தாக அறிவுறுத்துவார்.

மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்து, அரசு பதவிகளை பிடித்து உயிருள்ளவரை மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த மாபெரும் தலைவர். தான் எம்.ஜி.ஆர்-ன் தீவிர ரசிகன் எனவும், தான் இயக்குனராகும் முதல் படத்தில் எம்.ஜி.ஆர்-ன் ரசிகன்" கதா பாத்திரத்தின் கதை எழுதி, நடித்து, இயக்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பாதாகவும், தற்போது அதற்கான கதை விவாத பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள் என அனைவருக்கும் பிடிக்கும் விதமாக படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், இயக்குனர், கதாசிரியர், நடிகர் கோபி காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்