Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவேகானந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் பொது சுகாதாரத்தில் இயற்கை மருத்துவத்தின் பங்கு

நவம்பர் 14, 2023 12:10

நாமக்கல்: சங்ககிரியை அடுத்த வீரசிப்பாளையத்தில் உள்ள சுவாமி விவேகானந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் சர்வதேச இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு ஓர் புதிய உலக சாதனைக்காக 350 மாணவ, மாணவியர்கள் வாழை இலை குளியலில் பங்கேற்று அதன் செயல் முறைகள் மற்றும் நன்மைகளை அறிந்து கொண்டனர்.

வாழை இலை குளியலின் நன்மைகளான உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றுதல், உடல் பருமனை குறைத்தல் தோல் சார்ந்த நோய்களுக்கான (சோரியாசிஸ் , முகப்பரு, தேமல் ) நிவாரணி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல் ,சுவாச பாதை நோய்களின் அறிகுறிகளை குறைத்தல், சூரிய ஒளியில் இருந்து பெறக்கூடிய வைட்டமின் சத்துக்களை அதிகரித்தல் போன்றவற்றை அறிந்து பயன் பெற்றனர்.

விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை வகித்தார். சங்ககிரி வளாக தலைமை செயல் அலுவலர் வரதராஜு,  ரவிசங்கர், சுவாமி விவேகானந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜோதி நாயர் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறன் மேம்பாட்டு இயக்குனர் சுரேஷ்குமார் , விவேகானந்தா மருந்தியல் கல்லூரி முதல்வர் ஆனந்த குமார் , விவேகானந்தா மகளிர் செவிலியர் கல்லூரி துணை முதல்வர் மாலதி , விஸ்வபாரதி கல்வியியல் கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி , ரபீந்தரநாத் தாகூர் கல்வியியல் கல்லூரி முதல்வர் அழகுசுந்தரம் மற்றும் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

6 ஆம் ஆண்டு இயற்கை மருத்துவ தின விழாவை ஒட்டி நவம்பர் 15 ந் தேதி அன்று சங்ககிரி விவேகானந்தா வளாகத்தில் மாபெரும் இயற்கை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அதில் பங்கு பெறுபவர்களுக்கு கூப்பன் வழங்கப்படும் .அந்த கூப்பன் கொண்டு வரும் நபர்களுக்கு நவம்பர் 15, 2023 முதல் பிப்ரவரி 15, 2024 வரை ஏதேனும் 5 நாட்களுக்கு இலவச சிகிச்சை (உணவு மற்றும் தங்கும் இடம் உட்பட) வழங்கப்படும்.

தலைப்புச்செய்திகள்