Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நிர்வாகக் குழுவினருக்கு வரவேற்பு விழா

நவம்பர் 14, 2023 12:00

துபாய்: துபாய் அல் கிசஸ் பகுதியில் உள்ள அல்மிகாத்  உணவகத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் டாக்டர் ஏ.கே.காஜா நசீமுதீன், சுயநிதிப்பிரிவு இயக்குநர் டாக்டர் நிஹால், காஜாமியான் விடுதி இயக்குநர் டாக்டர் பாசில், திருச்சி உஸ்மான் ஜூவல்லரியின் உரிமையாளர் ஹாஜி உஸ்மான் சாஹிப் உள்ளிட்டோருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்த விழாவுக்கு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் மற்றும் தமிழ்த்துறை தலைவர் முனைவர் கம்பம் பீ.மு.மன்சூர் தலைமை வகித்தார்.

அவர் தனது உரையில் கல்லூரியில் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கு நிர்வாகக் குழுவினர் சிறப்பான பங்கினை வகித்து வருகின்றனர். அவர்களது பணி சிறப்பானதாக தொடர வாழ்த்து தெரிவித்தார். 

நிர்வாகக்குழு உறுப்பினர் திருவாவடுதுறை பஜ்ருதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முகைதீன் இறைவசனங்களை ஓதி, முன்னள் மாணவர்கள் சங்கம் அமீரகத்தில் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து விவரித்தார்.

இந்த பணிகளுக்கு தலைவர் பூதமங்கலம் ஜியாவுதீன் அவர்களது பங்களிப்பும், வழிகாட்டுதலும் சிறப்பானது என்றார். 

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் டாக்டர் ஏ.கே.காஜா நசீமுதீன் தனது உரையில் அமீரக முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு விழாவுக்கு நன்றி தெரிவித்தார்.

கல்லூரியின் வளர்ச்சிக்கு அமீரக முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும் என்றார். 

மேலும் கல்லூரியின் சுயநிதிப்பிரிவு இயக்குநர் டாக்டர் நிஹால், காஜாமியான் விடுதி இயக்குநர் டாக்டர் பாசில் ஆகியோர் முன்னாள் மாணவர்களின் சிறப்பான பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். 

திருச்சி உஸ்மான் ஜூவல்லரியின் உரிமையாளர் ஹாஜி உஸ்மான் சாஹிப், துபாய் நகரில் இந்த வரவேற்பு விழா ஒரு குடும்ப விழா இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களது பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன் என்றார். 

திருச்சி கோல்ட் நிறுவனத்தின் தலைவர், அய்மான் கல்லூரியின் தாளாளர் ஹபிபுல்லா உள்ளிட்டோர் வாழ்த்துரை நிகழ்த்தினர். 

துணைத்தலைவர் முதுவை ஹிதாயத் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். துணைப் பொதுச் செயலாளர் மன்னர் மன்னன் நன்றியுரை நிகழ்த்தினார். 

இவ்விழாவில் நிர்வாகக் குழுவினர் பஜ்ருதீன், நவாசுதீன், அனீஸ், முஹம்மது கனி, ஜகுபர் சாதிக், அலாவுதீன், ஜாபர் சித்தீக், ரஹ்மத்துல்லா, பைசுர் ரஹ்மான், முஹம்மது இக்பால்  மற்றும் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும் நாக் குழு மதிப்பீட்டில் 3.69 புள்ளிகள் பெற்றதற்காக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. வரும் 26 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மான் பூங்காவில் நடக்க இருக்கும் அமீரக தேசிய தின விழா மற்றும் முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சியின் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

தலைப்புச்செய்திகள்