Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் கலாச்சாரத் திருவிழா

நவம்பர் 13, 2023 01:29

நாமக்கல்: சேலம் மாவட்டம், சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் அங்கமான விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சுவாமி விவேகானந்தா நேச்சரோபதி யோகா மருத்துவக் கல்லூரி, விவேகானந்தா நர்சிங் மகளிர் கல்லூரி, விவேகானந்தா பார்மஸி மகளிர் கல்லூரி, விஸ்வபாரதி கல்வியியல் மகளிர் கல்லூரி, இரவீந்தநாத் தாகூர் கல்வியியல் மகளிர் கல்லூரி மாணவிகளின் சார்பில் விவேகானந்தா வளாகத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான ஸ்ரீநிவாசா மாஹாலில் தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம் மற்றும் கலாச்சாரத் திருவிழா வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. 

பட்டிமன்றம் மற்றும் கலாச்சார திருவிழா துவக்க விழாவிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனகைளின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார்.

நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், வைஸ் சேர்மன் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, தலைமை செயல் அதிகாரிகள் பேராசிரியர்கள் சொக்கலிங்கம், வரதராஜீ, திறன் மேம்பாட்டுத் துறை இயக்குநர் டாக்டர் குமரவேல், முதல்வர்கள் டாக்டர் ஜோதிநாயர், டாக்டர் ஆரோக்கியசாமி, டாக்டர் அழகுசுந்தரம், டாக்டர் ஆனந்தகுமார், துணைமுதல்வர் டாக்டர் மாலதி,  டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே. இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தழிழ்ச்செல்வன், வேலைவாய்ப்பு அதிகாரி அருண்பிரசாத்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தீபாவளி சிறப்புப் பட்டிமன்ற நடுவராக நாமக்கல் மாவட்ட தமிழ்ச்சங்க செயலாளரும், நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை துணைத் தலைவருமான நல்லாசிரியர் முனைவர் கோபால. நாராயணமூர்த்தி கலந்து கொண்டார்.  

இதில் “இன்றைய இளைஞர்களின் தேவை – அறிவுப் பெருக்கமா…? அல்லது உறவின் நெருக்கமா…?” என்ற தலைப்பில் பேராசிரியப் பெருமக்கள் மற்றும் விவேகானந்தா கல்விக்குழும மாணவிகள் தீபாவளி பட்டிமன்றத்தில் தங்கள் வதங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தனர். 

அறிவின் பெருக்கமே என்ற தலைப்பில் டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே. இரவிசங்கர், சுவாமி விவேகானந்தா நேச்சரோபதி யோகா மருத்துவக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பி.என்.ஒய்.எஸ் மாணவி பார்கவி, விவேகானந்தா நர்சிங் மகளிர் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி நர்சிங் மாணவி கோகிலா மற்றும் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி மைக்ரோபயாலஜி மாணவி மதுமிதா ஆகியோர் வதிட்டனர். 

உறவின் நெருக்கமே என்ற தலைப்பில் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மெய்வேல், இரண்டாம் ஆண்டு பயோகெமிஸ்டிரி மாணவி ஹரி சிவங்கரி, விவேகானந்தா நர்சிங் மகளிர் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி நர்சிங் மாணவி கோபிகா, சுவாமி விவேகானந்தா நேச்சரோபதி யோகா மருத்துவக் கல்லூரியின் முதலாம் ஆண்டு பி.என்.ஒய்.எஸ் மாணவி மதுமிதா ஆகியோர் வாதிட்டனர்.  

அனைவரின் வாதத்தையும் ஆழ்ந்து உற்று நோக்கி “இன்றைய இளைஞர்களின் தேவை உறவின் நெருக்கமே” என்று நடுவர் கோபால. நாராயணமூர்த்தி தீர்ப்பு வழங்கினார்.   

தீபாவளி சிறப்பு மன்றத்தின் மிகச் சிறப்பாக வாதிட்ட நடுவர், பேராசிரிய பெருமக்கள் மற்றும் மாணவிகளுக்கு கல்லூரி தலைமைச் செயல் அதிகாரி பேராசிரியர் வரதராஜீ நினைவுக் கேடயங்களையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். 

அதன்பிறகு விவேகானந்தா கலாச்சாரத் திருவிழா துவங்கியது. மாணவிகள் வண்ண வண்ண ஆடைகளில் நமது கலாச்சாரத்தைக் பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

கலாச்சாரத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய மாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை விவேகானந்தா மகளிர் கல்வி நிர்வாகத்தினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்