Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொடர் மழையால் மரவள்ளி கிழங்கு ரூ. 3000 விலை சரிவு, விவசாயிகள் கவலை 

நவம்பர் 13, 2023 01:20

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் பகுதியில் தொடர் மழையால் மரவள்ளி கிழங்கு விலை சரிவு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

சேந்தமங்கலம், கொல்லிமலை, காரவள்ளி, வெண்டாங்கி, முத்துகா பட்டி, பள்ளம்பாறை, பேளுக்குறிச்சி, மேலப்பட்டி, கல்குறிச்சி, வெள்ளாளப்பட்டி, புதுச்சத்திரம், நைனாமலை அடிவாரம், திருமலை பட்டி, எஸ்.உடுப்பம், சிங்களாந்தபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் 800 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலத்தில் அதிகளவில் விவசாயிகள் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளனர்.

இப்பகுதியில் முள்ளுவாடி, தாய்லாந்து, 226 வெள்ளை, வருச வெள்ளை, பர்மா, குங்குமரோஸ் உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் மரவள்ளி கிழங்குகள் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.  

இப்பகுதியில் விளைந்துள்ள மரவள்ளி கிழங்குகளை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் நேரடியாக மொத்தமாகவும், சில்லரையாகவும் கொள்முதல் செய்து செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதுச்சத்திரம், பேளுக்குறிச்சி, மலைவேப்பன்குட்டை, நாமகிரிப்பேட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் கிழங்கு அரவை மில்லிற்கு அனுப்புகின்றனர்.

மரவள்ளி கிழங்கு அரவை மில்லில் இருந்து ஜவ்வரிசி, மாவு தயாரித்து வெளி மாவட்டத்திற்கும், மாநிலங்களுக்கும் ஏற்றமதி செய்யப்படுகிறது. ஜவ்வரிசி மில் உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவு சத்து, புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து, விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சேந்தமங்கலம், காரவள்ளி, முத்துகாபட்டி உள்ளிட்டப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் மரவள்ளி கிழங்கு ஒரு டன்னுக்கு ரூ.3000 விலை குறைந்துள்ளது.

கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு ஒரு டன் 13 ஆயிரத்திற்கு விற்பனை யானது. இந்த வாரம் டன் ஒன்றுக்கு ரூ. 3000 விலை குறைந்து, 10 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மரவள்ளி கிழங்கின் தரம் பிரித்து ஒரு பயிண்ட் ரூ.380 முதல் ரூ.400 விலை நிர்ணயம் செய்யப்பட்டுகிறது.

மரவள்ளி கிழங்கு அறுவடை பாதிப்படைந்துள்ளது. இதனால் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்