Tuesday, 14th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுகாதாரப்பணிகள் துறையில் காலிப் பணியிடங்கள் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

நவம்பர் 11, 2023 10:08

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்திலுள்ள துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், அரசு மருத்துவமனைகள், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படை பணியிடங்களான:    

மாவட்ட தர ஆலோசகர், பல் மருத்துவர், குளிர்பதன மெக்கானிக், இடைநிலை சுகாதார பணியாளர், (மக்களைத் தேடி மருத்துவம்),  மருந்தாளுநர் (பள்ளி சிறார் நலவாழ்வு திட்டம்),  சுகாதார ஆய்வாளர் (மக்களைத் தேடி மருத்துவம்), தாய்மை துணை செவிலியர், பல் மருத்தவ உதவியாளர், புள்ளி விபரப் பதிவாளர், திட்டம் மற்றும் நிர்வாக உதவியாளர், பழங்குடியினர் நல ஆலோசகர்     -  1 என மொத்தம்    27 பணியிடங்களுக்கு மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் பணி நியமனம் செய்வதற்கு, தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மேற்கண்ட பதவிகளுக்கான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்கள் (Notification) நாமக்கல் மாவட்ட இணையதளம் (namakkal.nic.in) துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் விளம்பர பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு தகுதியான கல்வித் தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நேரிலோ, தபால் அல்லது மின்னஞ்சல் (dphnmk@nic.in) என்ற  முகவரிக்கு  உரிய  ஆவணங்களுடன் 27.11.2023 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

விண்ணப்பம்  அனுப்ப வேண்டிய முகவரி: துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் / நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், 
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் - 637 003.
மின்னஞ்சல் (dphnmk@nic.in) தொலைப்பேசி எண்:04286-281424

தலைப்புச்செய்திகள்