Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

நவம்பர் 11, 2023 11:34

எலச்சிபாளையம்: நாமக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி எலச்சிபாளையம் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம்  நடைபெற்றது. 

மருத்துவ முகாமில் கண் மருத்துவர்  ENT மருத்துவர், எலும்பியல் மருத்துவர், மனநிலை மருத்துவர், மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கினர்.

எலச்சிபாளையம் வட்டார கல்வி அலுவலர்கள் ராஜவேலு, வெங்கடாசலம் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு மகாலிங்கம் முன்னிலை வகித்தார். மருத்துவ முகாம் பற்றியும், மாற்றுத்திறன் அடையாள அட்டை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்றுனர்கள் பெரியசாமி, கமலா இயன்முறை மருத்துவர் செந்தில்குமார் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

மருத்துவ முகாமிற்கான முன்னேற்பாடுகளை சுதா, செந்தமிழ், பள்ளி ஆயத்த முகாம் ஆசிரியர் அஞ்சலி உதவியாளர் சாரதா ஆகியோர்  செய்திருந்தனர். மருத்துவ முகாமில் மாற்றுத்திறன் மாணவர்கள் 94 பேர் கலந்து கொண்டு மருத்துவ மதிப்பீடு மற்றும் அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் பரிந்துரைகளை பெற்றனர். 

இவர்களில் 9 மாற்று திறன் மாணவர்களுக்கு புதிய அடையாள அட்டையும், 13 மாற்றுத் திறன் மாணவர்களுக்கு அடையாள அட்டை புதுப்பித்தலும், 8 மாற்றுத் திறன் மாணவர்களுக்கு HSN பரிந்துரையும் 12 மாணவர்களுக்கு BUS PASS, TRAIN PASS பரிந்துரைகளும் 5 மாணவர்களுக்கு உதவி உதவி உபகரணங்கள் பரிந்துரைகளும் வழங்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்