Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எரிமலை வெடிப்பு ஏற்பட்ட நிலையில் கடலில் தோன்றிய புதிய தீவு

நவம்பர் 09, 2023 07:34

ஜப்பான்: கடலுக்கு அடியில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஏற்பட்ட நிலையில் அந்த இடத்தில் புதிய தீவு தோன்றியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தெற்கு  ஜப்பானில் ஐவோ ஜிமா என்ற பகுதியில்  திடீரென கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கடலுக்கு அடியில் பயங்கரமான எரிமலை வெடித்தது.

கடலுக்கு அடியில் வெடித்த இந்த எரிமலை 10 நாட்கள் இருந்த நிலையில் சாம்பல், பாறைகள் ஆகியவை தோன்றி கடலுக்கு மேலாக ஒரு தீவு போல காட்சி அளிக்கிறது.  

இந்த தீவு 100 மீட்டர் விட்டம் மற்றும் 20 மீட்டர் உயரத்தோடு இருப்பதாகவும் இந்த தீவு அப்படியே நிலையாக இருந்தால் நிரந்தரமான தீவாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது. 

ஆனால் இந்த தீவு நிலையாக இருக்க வாய்ப்பு இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடலுக்குள் எரிமலை வெடிக்கும் போதெல்லாம் இம்மாதிரி ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றும்  ஜப்பான் கடலியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

தலைப்புச்செய்திகள்