Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் மணல் லாரிகள் வேலை நிறுத்தம்

நவம்பர் 09, 2023 07:05

நாமக்கல்:  நாமக்கல்லில், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல ராஜாமணி செய்தியாளர்களுக்குஅவர் கூறியதாவது, இன்று நவ. 9ம் தேதி, காலை 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்,அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும், வருமான வரித்துறை ரெய்டுக்கு பின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசு மணல் குவாரிகளையும் உடனடியாக திறந்து இயக்க வேண்டும்.

லாரி உரிமையாளர்கள், டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும், அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள் தங்குதடையின்றி நடக்கவும், போர்க்கால அடிப்படையில், அதிக எண்ணிக்கையில் புதிய குவாரிகளை திறந்து, முறைகேடு இல்லாமல், இணையதளம் பதிவு மூலம், மணல் வழங்க வேண்டும்.

40 சதவீதம் உயர்த்தப்பட்ட காலாண்டு வரியை திரும்ப பெறவேண்டும். லாரி உரிமையாளர்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கும் ஆன்லைன் அபராதம் திட்டத்தை ரத்து செய்து, ஸ்பாட் பைன் விதிக்க வேண்டும் என்றார்.

தலைப்புச்செய்திகள்