Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேந்தமங்கலத்தில் துாய்மை, பசுமை தீபாவளி கொண்டாட உறுதிமொழி

நவம்பர் 09, 2023 06:18

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் டவுன் பஞ்., துப்புரவு பணியாளர்கள் துாய்மை தீபாவளி உறுதிமொழி எற்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் இளவரசன் தலைமை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் மலையப்பன் உறுதிமொழி வாசித்தார். 

சேந்தமங்கலத்தில் சுத்தமான இனிய தீபாவளி, சுற்றுச்சுழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்துவோம், ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டேன், இந்த தீபாவளியை துாய்மையானதாகவும், பசுமையானதாகவும் கொண்டாடுவேன் என உறுதியளிக்கிறேன் என உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்ச்சியில் துப்புரவு மேற்பார்வையாளர் அலகுராஜா, டிரைவர் பூபதி, துப்புரவு பரப்புரையாளர்கள் சத்தியவாணி, லதா, துப்புரவு பணியாளர்கள் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்