Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோமாரி நோய் தாக்கம் அதிகரிப்பு புதன்சந்தை மாட்டுசந்தையில் வர்த்தகம் பாதிப்பு 

நவம்பர் 09, 2023 06:15

சேந்தமங்கலம்: மாட்டு சந்தையில் வர்த்தகம் பாதிப்பு 1.60 கோடிக்கு நடந்தது. மாடுகளின் கோமாரி நோய் தாக்கதாலும், கேரளாவில் மீன் விற்பனை அதிகரிப்பாலும் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.     

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த புதன்சந்தையில் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணிக்கு மாட்டு சந்தை கூடியது.

ஒடிசா, சட்டிஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்து பொள்ளாச்சி, கேரளாவிற்கு நேரடியாக மாடுகள் இறக்குமதி செய்யப் படுகிறது. மேலும் கேரளாவில் மீன் விலை குறைவால் விற்பனை அதிகரிப்பு. கேரளா வியாபாரிகளின் வரத்து குறைவால் புதன்சந்தை மாட்டுசந்தை வர்த்தகம் குறைந்துள்ளது.    

மாடுகளை வாங்க, விற்க, கர்நாடகா மாநிலம், கோயம்புத்துார், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பசு, எருமை, கன்று குட்டிகள் விற்பனைக்கு குறைவாக வந்தன.

இறைச்சி மாடுகள் 15 ஆயிரத்திலிருந்து 23 ஆயிரத்திற்கும், கன்று குட்டிகள் 5 ஆயிரத்திலிருந்து 7500 க்கும் விற்பனை நடந்தது. பசு மாடுகளின் விலை 27 ஆயிரத்திற்கும், எருமை மாடுகள் 33 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

கடந்த சில மாதங்களாக கேரளாவிற்கு மாடுகள் நேரடியாக இறக்குமதி செய்வதால் மாடுகளின் விலை சரிந்து 1.60 கோடிக்கு வர்த்தகம் நடந்தன.

தலைப்புச்செய்திகள்