Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவா தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழ்நாடு அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை

நவம்பர் 09, 2023 06:13

நாமக்கல்: கோவாவில் 37-வது தேசிய விளையாட்டு போட்டி (கடந்த அக்டோபர் மாதம் 26- இல் தொடங்கி நவம்பர் -9 வரை) பல்வேறு பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்று வருகிறது.

இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். 

இதில் முதலிடம் தமிழகத்தை சேர்ந்த நர்மதா நித்தின் ராஜூ, ஸ்ரீ கார்த்திக் சபரி ஆகியோர் தங்கப் பதக்கத்தை வென்றனர். இரண்டாவது இடத்தை உத்தரப்பிரதேசம் அணி, மூன்றாவது இடத்தை மத்திய பிரதேசம் அணியினர் வென்றனர். 

இதில் தமிழ்நாடு துப்பாக்கி சூடும் அணிக்கு பயிற்சியாளர் நாமக்கல்லைச் சார்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான கேப்டன் ஆர்.பாண்டியன் இவர் நாமக்கல் சூட்டிங் அகாடமி தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கோவாவில்  5 இடங்களில் நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தடகளம், நீச்சல், துப்பாக்கி சுடுதல், கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை, கைப்பந்து, மல்யுத்தம், யோகாசனம் உள்பட 43 வகையான விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் இருந்து 446 பேர் கொண்ட குழு அனுப்பப் பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்