Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ்நாட்டில் புதுமைப்பெண் திட்டத்தில் நாமக்கல் மாவட்டம் முதலிடம் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி பெருமிதம் 

நவம்பர் 09, 2023 04:52

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், கரடிப்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நடைபெற்றது

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். 

நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 462 பயனாளிகளுக்கு ரூ.61.33 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பேசும் போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மூலம் மேல்முறையீடு செய்யப்பட்டு வரப் பெற்ற விண்ணப்பங்களை வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற சரிப்பார்ப்பு பணி, மேல்முறையீடு செய்தவர்களின் மனுக்களை பரிசீலனை செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்த குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த இரண்டு, மூன்று தினங்களில் மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கப்பட உள்ளது.

இத்திட்டம் என்பது தொடர் திட்டமாகும். எனவே, விண்ணப்பிக்காத குடும்பத் தலைவிகளும் கூட விண்ணப்பித்து இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

தமிழ்நாடு முதலமைச்சர், அரசு பள்ளியில் பயின்று மேற்படிப்பு / தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000/- வழங்கும் புதுமை பெண் திட்டம் தொடங்கி வைத்து செயல்படுத்தி வருகிறார்.

நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமான மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற்று தமிழ்நாட்டில் நமது மாவட்டம் முதலிடத்தில் இருப்பது பெருமைக்குரியது ஆகும்.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் தரமான முறையில் வழங்கப்பட்டு வருகின்றது. 

இன்றையதினம் கரடிபட்டியில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெறுவதையொட்டி, இப்பகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒரு மாத காலத்திற்கு முன் துணை ஆட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கரடிபட்டி கிராம பகுதிக்கு நேரடியாக வருகை புரிந்து கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து மனுக்களை பெற்று வந்தனர்.

அந்த மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு கள ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று 462 பயனாளிகளுக்கு ரூ.61.33 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வறாக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி வரும் அரசிற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி தெரிவித்தார்.

முன்னதாக பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதை  கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி பார்வையிட்டார்.

தொடர்ந்து, இம்முகாமில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து பெட்டகம், சுகாதாரத்துறையின் சார்பில்  ஊட்டச்சத்து பெட்டகம், வருவாய் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல் ஆணை என பல்வேறு துறையின் கீழ் 462 பயனாளிகளுக்கு ரூ.61.33 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் மு.செந்தில் குமார், ஊராட்சி மன்றத் தலைவர் வீ.நாகராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சிவக்குமார், மகளிர் திட்ட இயக்குநர் மா.பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் த.செல்வகுமரன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மா.க.சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ச.பாலாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இதில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) மரு.எம்.நடராஜன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் எஸ்.துரைசாமி, தோட்டக்கலைத்துறை (துணை இயக்குநர்) கே.கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.கே.முருகன், நாமக்கல் வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்