Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் வணிக வரித்துறை சமாதானத் திட்டம் 2023க்கான விழிப்புணர்வு கூட்டம்

நவம்பர் 09, 2023 04:46

நாமக்கல்: நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வணிகவரி நிலுவைகளை சமரசத் தீர்வு முறையில் சலுகைகளுடன் செலுத்தி முடிவு செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக ‘சமாதானத் திட்டம் - 2023’ தமிழக அரசால் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சமாதானத் திட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் திட்ட விளக்க கூட்டம், கோவை, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாநில வணிகவரி இணை ஆணையர் காயத்ரி கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். இத்திட்டம் குறித்த திட்ட விளக்கவுரையினை வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் தேவேந்திர பூபதி வழங்கினார். 

வணிக வரித்துறை ஆணையர் ஜெகநாதன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி, கோவை மாவட்ட தலைவர் இருதயராஜ், சேலம் நகர அனைத்து வணிகர் சங்கத்தின் பொது செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்து, இத்திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினர்.

நிறைவாக சேலம் கோட்டம் வணிகவரி இணை ஆணையர் ஜெயராமன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் ஒசூர் கோட்டங்களை சார்ந்த வணிகர்கள் மற்றும் வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்