Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலக மகளிர் தின விழாவில் “ஔவையார் விருது"  தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

நவம்பர் 08, 2023 08:48

நாமக்கல்: பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தமைக்கு 2024 ஆம் ஆண்டில் உலக மகளிர் தின விழாவில் “ஔவையார் விருது" வழங்கிட  கருத்துருக்கள்  வரவேற்கப்படுகின்றன.  

மேலும் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.  

விண்ணப்பிக்க தகுதிகள்:

    தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும்   இருத்தல் வேண்டும். 

    குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

கையேட்டில் இணைக்கப்பட வேண்டியவை:
1.      பொருளடக்கம் மற்றும் பக்க எண் (INDEX)
2.    உயிர் தரவு (Bio Data) மற்றும் Passport size photos (2)
3.    சுயசரிதை
4.    ஒரு பக்கம் தனியரை பற்றிய விவரம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) Soft copy and Hard copy 5.    தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின், அதன்            விவரம்/விருதின் பெயர்/யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்)
6.    சேவை பற்றிய செயல்முறைவிளக்கம் புகைப்படங்களுடன்
7.    சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை
8.    சமூக சேவையாளரின்/சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள்  பயனடைந்த விவரம்
9.    தொண்டு நிறுவனத்தின் பகிர்வு, உரிமம், ஆண்டறிக்கை
10.    சமூகப் பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று 
11.    இணைப்பு – படிவம் (தமிழ் மற்றம் ஆங்கிலத்தில்) முழுமையாக பூர்த்தி  செய்து  Soft copy and Hard copy அனுப்ப வேண்டும்.  எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது கருத்துருக்களை 20.11.2023 க்குள் தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) பதிவேற்றம்  செய்து மாவட்ட ஆட்சியர் வளாகம், கூடுதல் கட்டடம், முதல் தளம்,  அறை எண்.234 மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கருத்துருக்களை இரண்டு நகல்களுடன் சமர்பிக்குமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் 
ச.உமா தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்