Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மரக்கன்றுகள் நடும் விழா

நவம்பர் 08, 2023 08:14

நாமக்கல்: நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா, சமூக ஆர்வலர் மாரிமுத்து யோகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நுரையீரல் புற்றுநோயிலிருந்து குணமடைந்தவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ச.உமா குத்து விளக்கேற்றி வைத்து தொடக்கி வைத்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசும்போது, பெரிய நகரங்களில் கிடைக்கக்கூடிய புற்றுநோய் கண்டறியும் வசதிகள் நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் இருப்பது  இம்மாவட்டத்திற்கு சிறப்பு என்றும், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வையும், அதனை முன்பே கண்டறியும் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

இதன் தொடர்ச்சியாக மருத்துவர் சரவண ராஜமாணிக்கம் நுரையீரல் புற்றுநோய் பற்றியும் அதைப் பற்றிய விழிப்புணர்வு குறித்தும் பேசினார். புகைபிடிப்பவர்கள் மட்டுமின்றி புகை பிடிக்கும் பழக்கம் அல்லாதவர் களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இதனை லோடோஸ் சிடி ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும் என்பதை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தங்கம் மருத்துவமனையின் சார்பாக 100 பேருக்கு லோடோஸ் சிடி ஸ்கேன் இலவசமாக செய்யப்படும் என்று மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் இரா.குழந்தைவேல் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், வன பாதுகாப்பு திட்ட இயக்குனர் ரமேஷ்,மருத்துவர் மல்லிகா குழந்தைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்