Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

நவம்பர் 07, 2023 01:02

நாமக்கல்: சேலம் மாவட்டம், சங்ககிரி விவேகனாந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் அங்ஙமான சுவாமி விவேகானந்தா நேச்ச ரோபதி யோகா மருத்துவக் கல்லூரி, விவேகானந்தா பார்மஸி மகளிர் கல்லூரி, விவேகானந்தா நர்சிங் மகளிர் கல்லூரி, ரவீந்தரநாத் கல்வியியல் மகளிர் கல்லூரி, விஸ்வபாரதி மகளிர் கல்வியியல் கல்லூரிகளின் 2023 – 2024 ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.

விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ மனகைளின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார்.

நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், வைஸ்சேர்மன் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, தலைமை செயல் அதிகாரிகள் பேராசிரியர்கள்  சொக்கலிங்கம், வரதராஜீ, விவேகானந்தா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் பாராமெடிக்கல் கல்லூரிகளின் இயக்குநர் டாக்டர் கோகுல்நாதன், திறன் மேம்பாட்டுத் துறை இயக்குநர் டாக்டர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவேகானந்தா பார்மஸி மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆனந்தகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். விஸ்வபாரதி கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆரோக்யசாமி, ரவீந்தரநாத் தாகூர்
கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அழகுசுந்தரம், திருச்செங்கோடு விவேகானந்தா நர்சிங் கல்லூரி முதல்வர் டாக்டர் சுமதி, சங்ககிரி விவேகானந்தா நர்சிங் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் மாலதி,
அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன், வேலைவாய்ப்பு அதிகாரி அருண்பிரசாத் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இந்த
விழாவில் பங்கேற்றனர்.

 சுவாமி விவேகானந்தா நேச்சரோபதி யோகா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜோதிநாயர் நன்றி கூறினார்.

விழா நிறைவில் பெற்றோர்கள் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனகைளின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி க்கு பொன்னாடைகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவம் செய்தனர்.

விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்