Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பட்டாசு கடை உரிமையாளர்கள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: ராசிபுரம் காவல் ஆய்வாளர் எச்சரிக்கை

நவம்பர் 07, 2023 11:14

ராசிபுரம்: தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு கடை உரிமையாளர்கள் விதிமுறையை பின்பற்ற, ராசிபுரம் காவல் ஆய்வாளர் சுகவனம் அறிவுரை வழங்கினார். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தற்காலிக மற்றும் நிரந்தர பட்டாசுக் கடைக்கு உரிமை பெற்றுள்ளனர். 

பட்டாசு கடைகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும், தீ விபத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம், ராசிபுரம் காவல்நிலையத்தில், காவல் ஆய்வாளர் கே.சுகவனம்,  தலைமையில் நடைபெற்றது. 

இதில் அவர் பேசுகையில், குழந்தைத் தொழிலாளர்களை கடையில் வேலைக்கு ஈடுபடுத்தக்கூடாது. 

பட்டாசுகள் தீப்பற்றாத கட்டடத்தில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள உரிமம் பெற்ற தொழிற்சாலையில் இருந்து பட்டாசுகளை வாங்க வேண்டும். 

பட்டாசு இருப்பு விபரங்களை அதிகாரிகள் கேட்கும்போது காண்பிக்க வேண்டும். 

மின் விளக்குகள் சுவர், கூரையில் பொருத்தியிருக்க வேண்டும். 

தீயணைப்பான் கருவிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றார்.  

மேலும் உரிய பாதுகாப்புடன் இந்த பட்டாசுகள் பயன்படுத்த வேண்டும், பொதுமக்களுக்கு பாதிப்பும் இல்லாத வகையில் இதனை பயன்படுத்த வேண்டும், மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். மேலும் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பையும் நீங்கள் தான் ஏற்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்தார்.

இந்தக் கூட்டத்தில், பட்டாசு விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் எனப்  பலர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்