Tuesday, 14th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

“கோ-ஆப்டெக்ஸ்“ தீபாவளி 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை

நவம்பர் 06, 2023 11:50

நாமக்கல்: இந்தியாவிலேயே மிகப்பெரிய கைத்தறி நெசவாளர்களின் கூட்டுறவு சங்கமாக விளங்கும் “கோ-ஆப்டெக்ஸ்“ 1935-ம் ஆண்டு துவங்கப்பட்டு 88 ஆண்டுகளாக 150 விற்பனை நிலையங்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சேலம் மாநகரில் முதல் முறையாக கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையம் நகரும் படிக்கட்டுகளுடன் நவீனப்படுத்தப்பட்டு புதுப்பொலிவுடன் கடந்த 02.10.2023 காந்தி ஜெயந்தி அன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

 கோ-ஆப்டெக்ஸில் தமிழரின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நவீனமும் கலந்த புதிய வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களை கொண்டு கைத்தறி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்டு மற்றும் “புவி சார் குறியீடு“ பெற்ற கைத்தறி இரகங்களான காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ஆரணிபட்டு புடவைகள், திருபுவனம் பட்டு புடவைகள், செட்டிநாடு காட்டன் புடவைகள், சுங்கடி காட்டன் புடவைகள், நெகமம் காட்டன் புடவைகள், 

சேலம் பட்டு வேட்டிகள், பவானி ஜமக்களம் ஆகிய இரகங்களும், கோயம்புத்தூர், திருப்பூர் மென்பட்டு சேலைகள், கோராபட்டுச் சேலைகள், காரைக்குடி செட்டிநாடு சேலைகள், சேலம், ஜெயங்கொண்டம், அருப்புக்கோட்டை, பரமக்குடி பருத்தி சேலைகள், சின்னாளப்பட்டி சேலைகள், ஆர்கானிக் சேலைகள், ஸ்டோல்கள், வேட்டிகள், லுங்கிகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், ஏற்றுமதி இரக வீட்டு உபயோக துணி இரகங்கள், ஜமக்காளங்கள், துண்டுகள், திரைச்சீலைகள், தோடர் பழங்குடியின மக்களின் எம்ப்ராயிடரி துணி தயாரிப்புகள், சுடிதார் மெட்டீரியல்கள், குர்த்தீஸ்கள், ரெடிமேட் சட்டைகள் மற்றும் கைப்பைகள் போன்ற ஏராளமான இரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

மேலும், இவ்வாண்டு  “கோ-ஆப்டெக்ஸ்“ முதல்முறையாக புதிய Slim Fit சட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து தூய பட்டு புடவைகளுக்கும் தூய பட்டின் அடையாளமாக ஜரிகையின் தரத்தினை அறியும் வண்ணம் தங்கம் மற்றும் வெள்ளியின் சதவீகிதம் குறிப்பிட்டு ஜரிகை தர அட்டை வழங்கப்படுகிறது.

கோ-ஆப்டெக்ஸில் ஆண்டுதோறும் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15 முதல் விநாயகர் சதுர்த்தி, மிலாடிநபி, தீபாவளி, கிருஸ்துமஸ், புத்தண்டு மற்றும் பொங்கல் என தொடரும் அனைத்து பண்டிகைக் காலங்களிலும் மக்கள் பயன்பெறும் வகையில் ஜனவரி மாதம் வரை அனைத்து கைத்தறி இரகங்களுக்கும் தமிழக அரசு 30% சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.

மேலும், இச்சிறப்பான பண்டிகைக்காலங்களில் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி உண்டு. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கோ-ஆப்டெக்ஸ் ஆடைகளுடன் பண்டிகையை கொண்டாட கேட்டுக் கொள்கிறோம்.

 போலி பட்டு புடவைகள் வாங்குவதிலிருந்து மக்களை காக்கும் “கோ-ஆப்டெக்ஸ்“.
 தங்களது வீட்டு இல்லத்தரசிக்கும், இளவரசிக்கும் கோ-ஆப்டெக்ஸின் தரமான பட்டு மற்றும் பருத்தி ஆடைகளை பரிசளிக்கும் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களின் நம்பிக்கை ஸ்தாபனமாக “கோ-ஆப்டெக்ஸ்“ விளங்குவதில் பெருமிதம் கொள்கிறோம் என சேலம் மண்டல மேலாளர் காங்கேயவேலு கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்