Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராசிபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  ரவுடிகளை தணிக்கை செய்யும் பணி

நவம்பர் 06, 2023 11:27

ராசிபுரம்: தீபாவளி பண்டிகையையொட்டிதமிழக காவல் துறை இயக்குனர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தலின் பெயரில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் ஆலோசனையின்படி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரவுடிகளை தணிக்கை செய்யும் பணி நடந்தது.

ராசிபுரம் காவல் ஆய்வாளர் கே.சுகவனம்,  தலைமையில், காவல் உதவி ஆய்வாளர்கள் தங்கம், சிவா, ஜெயக்குமார் சுப்பிரமணி மற்றும் 10 பேர் கொண்ட காவலர்கள் ராசிபுரம் பெருமாள் சந்து, எல்.ஐ.சி காலனி, நாமக்கல் ரோடு எல்ஐசி., எதிரே உள்ள பகுதி மற்றும் காளியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதியில் உள்ள  ரவுடிகளை தணிக்கை செய்தனர்.  

அதேபோல் கிழக்குத் தெரு, கோனேரிப்பட்டி, மேட்டுக்காடு, மற்றும் புதிய பஸ் நிலையம் பகுதி, பட்டணம், அணைப்பாளையம், விஜயலட்சுமி திரையரங்கம் பகுதி உள்ளிட்ட இடங்களில் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

இதில் கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் இல்லங்களிலும்  ரவுடிகள் இல்லங்களிலும் இந்த ஆய்வு நடைபெற்றது.

இவர்களின் தற்போது நிலை என்ன? வீட்டில் ஆயுதம் ஏதாவது பதுக்கி உள்ளார்களா? தற்சமயம் அந்த பகுதியில் என்ன செய்து கொண்டுள்ளனர் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

தணிக்கை பணி மட்டும் நடந்தது, கைது நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

தலைப்புச்செய்திகள்