Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்வு : ஒரு முட்டை ரூ. 5.30

நவம்பர் 06, 2023 11:04

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்ந்து ஒரு முட்டை ரூ. 5.30 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். 

கடந்த நவ. 1 ஆம் தேதி முட்டை விலை ரூ. 5.20 ல் இருந்து 5 பைசா உயர்த்தப்பட்டு, ரூ. 5.25 ஆனது. இந்த நிலையில் நேற்று 5 ஆம் தேதி மாலை நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டை விலை ரூ. 5.30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்