Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இறைவனை வழிபடும் புண்ணிய தினமே தீபாவளி

நவம்பர் 04, 2023 04:44

ஆன்மீகம்: தீபாவளி என்பதன் பொருளை நோக்குவோமாயின் தீபம்-ஆவளி என இரு சொல் இணைந்ததே தீபாவளி ஆகும். தீபம் என்பது விளக்கு என்றும் ஆவளி என்றால் வரிசை என்றும் பொருள். அதாவது தீபங்களை வரிசையாக ஏற்றி ஒளிமயமாக இறைவனை வழிபடும் புண்ணிய தினமே தீபாவளியாகும். 

வாழ்வில் இருள் (தீமைகள்) அகன்று ஒளி (நன்மைகள்) வீசும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும். தீபாவளி பண்டிகையின் தோற்றம் பற்றி இந்துக்கள் மத்தியில் பல்வேறு ஐதீகங்கள் நிலவுகின்றன. அந்த வகையில் ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து நாடு திரும்பும்போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர், இதனையே தீபாவளியாக கொண்டாடுவதாக கருதப்படுகிறது. 

இதேபோல், பவிச்சக்கரவர்த்தியை போற்றும் வகையில் தோன்றியது என்ற ஐதீகமும் உண்டு. நரகாசுரன் என்னும் பழைய மரபு கதையின் அடிப்படையில் தோன்றியது எனவும் கூறப்படுகிறது. இதுவே பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நரகாசுரன் கடும் தவத்தினால் பல ஆற்றல்களைப் பெற்றமையால் தானே கடவுளிலும் மேலானவன் என்ற மமதை ஏற்பட்டது. இதனால் தேவர்களையும் ரிஷிகளையும் கொடுமைப்படுத்தினான். 

இவனது கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்களும் ரிஷிகளும் தம்மை காத்தருள வேண்டுமென மகாவிஷ்ணுவிடம் வேண்டினர். அதன்பேரில், மகாவிஷ்ணு கண்ணன் அவதாரம் எடுத்து அந்தி சாயும் நேரத்தில் சத்யபாமாவின் உதவியுடன் நரகாசுரனை சம்ஹாரம் செய்தார். இவ்வாறு வதம் செய்த நாளே இருள் நீங்கி ஒளி பெற்ற நாளாக எண்ணி தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.

தீபாவளிப் பண்டிகையானது பல சிறப்புகளை பெற்றுள்ள பண்டிகையாகும். தீபாவளியன்று நீராடுவதை விசேடமாகக் சொல்லப்படுகின்றது. அதாவது “புனித நீராடல் என்று சொல்லப்படுகின்றது. நன்மையின் வெற்றி தீமையின் அழிவு என்பதனைத்தான் கிருஷ்ண பகவான் நரகாசுரன் அழிவின் மூலம் உலகத்திற்கு உணர்த்தியுள்ளார். தீபாவளியின் சிறப்புகளில் ஒன்றாக சிங்கப்பூரில் தீபாவளிப் பண்டிகையை சிறப்பித்து தபால் தலை வெளியிடப்பட்டுள்ளமையைக் கூறலாம். 

திருமணமான தம்பதியினர் திருமணத்திற்கு பின் வரும் முதல் தீபாவளியைத் தல தீபாவளி என்று சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். தீபாவளி அன்று அனைத்து நதிகள் ஏரிகள் குளங்கள் கிணறுகளிலும் நீர்நிலைகளிலும் கங்கா தேவி வியாபித்து இருப்பதாக ஐதீகம் உண்டு. இன் நாளில் எண்ணை தேய்த்து நீராடுபவர்கள் கங்கையில் நீராடிய புனிதத்தையும் திருமகளின் அருளையும் பெறுவர்.

தலைப்புச்செய்திகள்