Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அபுதாபியில் இந்து கோவில் கட்டுமானப் பணிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார்

நவம்பர் 04, 2023 04:16

அபுதாபி: அபுதாபியில் பாப்ஸ் இந்து கோவில் மிகவும் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டு வருகிறது. 

இந்த கோவில் அடுத்த ஆண்டு 2024 பிப்ரவரி மாதம் திறக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக வந்த இந்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறைக்கான அமைச்சர் தர்மேந்திர பிரதான் கோவில் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். 

மேலும் பூஜிக்கப்பட்ட செங்கலை எடுத்து அடுக்கினார். கோவில் கட்டுமானப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வரும் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். கோவிலுக்கான இடத்தை வழங்கிய அமீரக அரசுக்கும் நன்றி தெரிவித்தார். 

அப்போது இந்திய தூதர் சஞ்சய் சுதிர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்