Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நவீன ஃபேஷன் ஆடை வடிவமைப்பு கண்காட்சி

நவம்பர் 04, 2023 04:08

நாமக்கல்: சேலம் மாவட்டம், சங்ககிரி விவேகானந்தா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில்; டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின்  சார்பில் 2 நாள் நவீன ஃபேஷன் ஆடை வடிவமைப்பு கண்காட்சி நடைபெற்றது. 

நிறைவு விழாவிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனகைளின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார்.

நிர்வாக இயக்குனர்  கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், வைஸ்சேர்மன் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, தலைமை செயல் அதிகாரிகள் பேராசிரியர்கள் சொக்கலிங்கம், வரதராஜீ, திறன் மேம்பாட்டுத்துறை இயக்குநர் டாக்டர் குமரவேல், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே. இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தழிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முதல் நாள்; கண்காட்சியில் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் மாணவிகளின் சுயதொழில் மேம்பாட்டில் உருவான நவீன ஃபேஷன் ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

முதல் நாள் கண்காட்சியின் சிறப்பு விருந்தினராக குமாரபாளையம் அன்பு கலை அறிவியல் கல்லூரியின் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைத் தலைவர் பேராசிரியர் சத்யரூபா கலந்து கொண்டார்.

மிகச் சிறந்த முறையில் ஆடைகளை வடிவமைத்த மாணவிகளை டிசைன், நேர்த்தி, ஃபேஷன் அடிப்படையில் பேராசிரியர் சத்யரூபா தேர்ந்தெடுத்தார். 

இரண்டாம் நாள்; கண்காட்சியில் இரண்டாம் ஆண்டு டெக்ஸ்டைல் ஃபேஷன் டிசைனிங் மாணவிகளின் கைவண்ணத்தில் உருவான நவீன ஃபேஷன் ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இரண்டாம் நாள் கண்காட்சியின் சிறப்பு விருந்தினராக கொங்கணாபுரம் வித்யா கலை அறிவியல் கல்லூரியின டெக்ஸ்டைல் ஃபேஷன் டிசைனிங் துறைத் தலைவர் பேராசிரியர் சௌந்தர்யா கலந்து கொண்டார்.

மிகச் சிறந்த முறையில் ஆடைகளை வடிவமைத்த மாணவிகளை பேராசிரியர் சௌந்தர்யா தேர்ந்தெடுத்தார். 

சிறந்த முறையில் ஃபேஷன் ஆடைகளை வடிவமைத்த டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பேராசிரியர் சத்யரூபா, பேராசிரியர் சௌந்தர்யா, டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே. இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், துறைத்தலைவர் முனைவர் மெய்வேல் மற்றும் பேராசிரியர் மணிகண்டன் ஆகியோர் பரிசு மற்றும்  பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர். 

கண்காட்சிக்கான ஏற்பாடுகளை விவோகனந்தா ஃபேஷன் கிளப் மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்