Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாலை நேர மழையால் கடை வியாபாரிகள் கலக்கம்

நவம்பர் 04, 2023 03:47

பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமான ஜவுளிக்கடையில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்காலிக பட்டாசு கடைகள், இனிப்பு கடைகள், உள்ளிட்டவை அதிகம் பள்ளிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஜவுளி கடைகளில் கணிசமான அளவில் விற்பனைக்காக ஜவுளி பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மாலை நேரங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை வியாபாரத்தை எதிர்நோக்கி உள்ள வியாபாரிகள் மாலை நேர மழையின் காரணமாக கலக்கமடைந்துள்ளனர் .

இதுகுறித்து, தற்காலிக பட்டாசு கடை அமைத்துள்ள கடை உரிமையாளர் ஒருவர் கூறும் பொழுது,  தீபாவளி பண்டிகை உள்ளிட்ட விசேஷ காரணங்களால் தற்போது தற்காலிக பட்டாசு கடைகளை அமைத்து அதிகளவு பட்டாசுகளை விற்பனைக்கு குவித்து வைத்துள்ளோம்.

எங்களைப் போலவே சிறிய அளவில் சாலையோர வியாபார கடைகள் அதிகம் அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்கிறது. பெய்யும் மழையின் காரணமாக பட்டாசுகள் நனைந்து பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து பெய்யும் இந்த மழையின் காரணமாக மாலை நேரத்தில் கணிசமாக நடைபெறும் வியாபாரமும் குறைந்துள்ளது. தீபாவளி வரை இப்படியே மழை பெய்தால் போட்ட முதல் பணத்தையே எடுக்க முடியாத நிலை உருவாகிவிடும் எனத் தெரிவித்தார். தீபாவளி பண்டிகை விற்பனை பாதிக்காத வகையில் இயற்கை கருணை காட்ட வேண்டும் என கடை உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தலைப்புச்செய்திகள்