Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு உற்சவர் திருவீதி உலா

நவம்பர் 03, 2023 12:08

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.  

கோவிலில் ஐப்பசி மாதம் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டும் ஐப்பசி ஏழாம் நாள் செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதல்  நிகழ்ச்சி  விமர்சையாக நடைபெற்றது.  

இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளான கம்பம் நடும் விழா மற்றும் பல்வேறு கட்டளைதாரர்களின் சுவாமி திருவீதி உலா சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

எட்டாம் நாள் மண்டபக் கட்டளை பண்டிகை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன் உற்சவர்  புஷ்ப பல்லாக்கில் செண்டை மேளம் முழங்க கேரள தெய்யம் நடனம் மற்றும் வான வேடிக்கையுடன் தியாகராஜ சுவாமி தெரு, சௌராஷ்ட்ரா தெரு மற்றும் முக்கிய பகுதியில்  சாமி திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது.  

ஏராளமான பக்தர்கள் சுவாமி உற்சவ திருவீதி உலாவில் கலந்து கொண்டு  பூஜை செய்து சென்றனர்.  

முன்னதாக  ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு முக்கிய அபிஷேகங்களான பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் , இளநீர், பன்னீர் போன்றவற்றால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.

 திரளான பக்தர்கள் கலந்து தரிசனம் செய்து அன்னதானம் பெற்று சென்றனர்.

இந்த நிகழ்வில்  ராசிபுரம் சௌராஷ்ட்ர  விப்ரகுல சமூக சபா அறக்கட்டளை தலைவர் சி.கே.சீனிவாசன், காஞ்சனா தேவி,                        சி.கே.ராமமூர்த்தி, மீரா தேவி, முன்னாள் தலைவர் ராசிபுரம் ஜுவல்லர்ஸ் அசோசியேசன் எஸ்.கே.ஜெயபால் ஜெயலட்சுமி, ராசிபுரம் சௌராஷ்ட்ர விப்ரகுல சமூக சபா அறக்கட்டளை இயக்குனர் ராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளை தலைவர் ஜெ.ஜெயப்பிரகாஷ், மகளிர் சங்க செயலாளர் ஜெ.சுமதி ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜுவல்லரி ஜெ.நவநீதன் ஸ்ரீதிவ்யா, சூர்யா ஸ்கேன் சென்டர் ஆர்.ராமமூர்த்தி சாந்தி, எஸ் எம் ஜெயராமன், மாதர் சங்க செயலாளர் பத்மினி, எஸ்.ஜெ.ரமேஷ் வித்யா சர்வமோகன், ஆர்வி பிரணவ் கிருஷ்ணா, மற்றும் ராசிபுரம் சௌராஷ்ட்ர விப்ரகுல கலாச்சார அறக்கட்டளை தலைவர் சுப்பிரமணியன் கீதா, சௌராஷ்ட்ர விப்ரகுல சமூக சபா அறக்கட்டளை துணைத் தலைவர் லட்சுமிராம்ஸ் டெக்ஸ்டைல்ஸ் பி.டி.சிவக்குமார் , மகளிர் சங்கத் தலைவி ராஜேஸ்வரி, ரவி சில்க்ஸ் ஆர்.சாந்தி ரகுநாதன், மற்றும் ராசிபுரம் சௌராஷ்ட்ர விப்ரகுல  இளைஞர்கள் சங்கம், ராசிபுரம் சௌராஷ்ட்ர விப்ரகுல மாதர் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்