Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முந்த்ரா துறைமுகத்தில் ரூ.4 லட்சம் கோடி முதலீடு செய்ய அதானி குழுமம் திட்டம்

நவம்பர் 02, 2023 07:52

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் ரூ.4 லட்சம் கோடி முதலீடு செய்ய அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி அடுத்த கட்ட வளர்ச்சிக்கான திட்டங்களை அதானி குழுமம் வகுத்துள்ளது.

முந்த்ரா துறைமுகத்தில் கடந்த 25 ஆண்டுகளில் ரூ.70,000 கோடி வரை அதானி குழுமம் முதலீடு செய்துள்ளது.

மேலும், அதானி குழுமம் சோலார் பேனல் ஆலை, காற்றாலை, காப்பர் தயாரிப்பு ஆலைகளில் அடுத்த 6 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் 35,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி குழுமத்தின் ஆலைகள் மற்றும் துறைமுகத்தின் வாயிலாக இதுவரை 25,000 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும் சராசரியாக மாதந்தோறும் 5 லட்சம் சரக்குகளை இத்துறைமுகம் கையாண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்