Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு அறிவிப்பு

நவம்பர் 02, 2023 07:37

புதுச்சேரி: தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நேர கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அமைதி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், வழிபாட்டு தளங்கள், கல்வி கூடங்கள் மற்றும் நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் 100 மீட்டருக்கு அப்பால் பட்டாசுகளை வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதேபோல் சரவெடி பட்டாசு உற்பத்தி, பயன்பாடு மற்றும் உற்பத்தி தடை செய்யபட்டுள்ளதாகவும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்